”மீ டூ” விவகாரத்தில் பெண் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து வாய்திறக்க ஆரம்பித்ததில் இருந்து, தினம் புதுப்புது புகார்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணியும் தற்போது அது மாதிரியான ஒரு புகாரை தான் முன்வைத்திருக்கிறார். 

டோலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் தற்போது இளைய தளபதி சீரியலில் நடித்து வருகிறார். இவர் 16 வயதில் கண்ட ஹண்டாத்தி எனும் படத்தில் நடித்த போது தனக்கு நேர்ந்த பிரச்சனையை தற்போது வெளிப்படையாக கூறி இருக்கிறார். இந்த படத்தில் நடித்த போது ஒரு முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என முன்னரே அக்ரிமெண்டில் கையெழுத்து வாங்கி இருந்தனர். 

அந்த காட்சியை படம் பிடிப்பதற்காக பாங்காக் சென்றிருந்த போது, என் அம்மாவை அங்கிருந்து போக சொல்லிவிட்டனர்.அதன் பிறகு இந்த காட்சியை 50 முறை ரீ டேக் எடுத்தனர். என்ன நடக்கிறது என்று தெரிந்தும் , எதுவும் செய்ய முடியாமல் உள்ளுக்குள் அழுதேன். அதன் பிறகு மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் எண்ணம் கூட வந்தது. என்ன் அம்மாவின் துணையால் அவற்றை எல்லாம் மீறி வந்திருக்கிறேன் . என சஞ்சனா தெரிவித்திருக்கிறார். 

இந்த காட்சியால் நீ பெரிய இடத்துக்கு வரபோற என்றெல்லாம் சொன்னார்கள். கடைசியில்  அந்த காட்சியையும் சென்சார் தடை செய்துவிட்டது. என அந்த பேட்டியின் போது கூறி இருக்கிறார் சஞ்சனா கல்ராணி.