Asianet News TamilAsianet News Tamil

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு வெறித்தனமான டைட்டில்..!

நடிகர் சூர்யா 'காப்பான்' படத்தை தொடர்ந்து,  பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ள, 'சூரரைப்போற்று' திரைப்படத்தில், நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
 

director hari and surya movie title announced
Author
Chennai, First Published Mar 1, 2020, 6:44 PM IST

நடிகர் சூர்யா 'காப்பான்' படத்தை தொடர்ந்து,  பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ள, 'சூரரைப்போற்று' திரைப்படத்தில், நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தன்னுடைய 39 வது படத்தை, இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு 'அருவா' என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

director hari and surya movie title announced

 இந்த படத்தை ஞானவேல்ராஜா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ஏற்கனவே இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா ஆறு, வேல், சிங்கம் சீரிஸ் என  ஐந்து படங்களில் நடித்துள்ளார். 
தற்போது ஆறாவது முறையாக 'அருவா' படத்தில் கைகோர்த்துள்ளார்.  இந்த படத்திற்கு 'டி.இமான்'  இசையமைக்கிறார்.

director hari and surya movie title announced

தீபாவளியை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய 40 ஆவது படத்தை, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

director hari and surya movie title announced

ஏற்கனவே தல அஜித்தின் வலிமை திரைப்படம் தீபாவளி ரேஸில் இருக்கும் நிலையில், 'அருவா' படத்தை ரேஸில் இறக்க சாணை தீட்டி வருகிறார் ஹாரி.

Follow Us:
Download App:
  • android
  • ios