இந்தி திரைப்பட உலகில் தனுஸ்ரீ தத்தா போல, தனக்கும் ஒரு பாலியல் சீண்டல் இருந்ததாக மற்றொரு நடிகை கூறியுள்ள சம்பவம், திரைப்பட வட்டாரத்தில் அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.
 
ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற திரைப்படத்தில் நடித்தபோது, இந்தி நடிகர் நானா படேகர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா ஒருபுறம் இருக்க, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள மற்றொரு இந்தி நடிகை ஷப்னா பாப்பி தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூகவலைதளத்தில் நீளமாக பதிவிட்டுள்ளார்.


 
அனில் கபூர் நடித்த தொலைக்காட்சி தொடரான 24-ல் கிரண் ரத்தோடாக நடித்து பிரபலமானவர் ஷப்னா பாப்பி. படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து பதிவிட்டுள்ளதாவது, ”படப்பிடிப்பு தளத்தில் ஆதரவு கிடைக்கும் என்று நினைத்து மற்றொரு பெண்ணிடம் சென்றால், அவர் ஆணுடன் சேர்ந்து கொண்டு தன் பின்னால் சிரித்த சம்பவம் நடந்தது.
 
ஒரு பாடலுக்கு நான் டான்ஸ் ஆடியபோது நடந்த சம்பவம் எனக்கு இன்னும் அப்படியே நினைவில் உள்ளது. ஒத்திகையின்போது, நான் என் உடை அலங்கார நிபுணரிடம் சென்று, அன்டர் வயருடன் உள்ள இருக்கமான பிராவை போட்டுக் கொண்டு 7 மணிநேரத்திற்கும் மேலாக நடனமாடினால் நெஞ்சு வலிக்கும் என்று கூறினேன். அவர் ஒரு பெண் என்பதால், எனது பிரச்சனையை புரிந்து கொண்டு, உதவுவார் என்று நம்பினேன்.


 

அன்டர்வேரை மட்டும் நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும், எனக்கு எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்தேன். அவரோ நான் கூறியதை இயக்குனரிடம் தெரிவித்து கிண்டல் செய்து சிரித்தார். ஆனால் நாங்கள் கூறியபடி அன்டர்வயருடன் தான் பிகினி அணிய வேண்டும் என்று ஆண் இயக்குனர் வலியுறுத்தியதால் அப்படியே அணிய வேண்டியதாகிவிட்டது.

இயக்குனர் வலியுறுத்தியும் முடியாது என்று கூறினால் படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள், அல்லது தயாரிப்பு நிறுவனம் என் பெயரை பிளாக் லிஸ்ட் செய்துவிடுமோ என்ற பயத்தில் அந்த டைட்டான பிராவை அணிந்து நடித்தேன். அன்று இரவு நெஞ்சு வலி தாங்க முடியாமல் தூக்கத்தின் பாதியில் விழித்தேன். இரவு எப்படி அழுதேன் என்பதை எப்பொழுதும் மறக்கவே முடியவில்லை என்று ஷப்னா பாப்பி கூறியுள்ளார்.
 
ஷப்னா பாப்பி போல, சோனம் கபூர், கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபல நடிகைகளும், தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளதால், இந்தி திரையுலகினர் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.