துணிவு ஃபர்ஸ்ட் ஆஃப் அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது - இயக்குநர் ஹெச் வினோத்!
துணிவு ஃபர்ஸ்ட் ஆஃப் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று இயக்குநர் ஹெச் வினோத் தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச் வினோத் - அஜித் குமார் ஆகியோரது காம்பினேஷனில் உருவாக்கப்பட்ட 3ஆவது படம் துணிவு. இந்தப் படத்தில் அஜித்தின் ஸ்டைலும், கெட்டப்பும் தாறுமாறாக இருக்கிறது. துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜி எம் சுந்தர், அஜய், பகவதி பெருமாள், ஜான் கோக்கென், மகாநதி சங்கர், மமதி சாரி, சிபி புவனா சந்திரன், சிராக் ஜானி, பவானி ரெட்டி, ஜி பி முத்து, மோகன சுந்தரம், நயனா சாய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
மாஸ்திரம் முதல் காந்தி பாத் வரை: ரசிகர்களை அதிர்க்குள்ளாக்கிய நடிகைகளின் ஹாட் சீன்ஸ்!
துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்கஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது. இந்த டிரைலரை வைத்து பார்க்கும் போது படம் வங்கி கொள்ளையை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர்.
ஆச்சரியமாக இருந்தாலும் இது தான் உண்மை: ஏன் அஜித் குமார் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை தெரியுமா?
இந்த நிலையில், படம் குறித்து இயக்குநர் ஹெச் வினோத் கூறியிருப்பதாவது: வங்கி கொள்ளை தான் படம் முழுவதும் கிடையாது. அது படத்தின் ஒரு பகுதி தான். துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது. 2ஆம் பகுதி அனைத்து ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையான பொழுதுபோக்கு படம். அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் இருக்கும் என்று கூறியுள்ளதாக சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிளானை மாற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்: துணிவு, வாரிசு 480 திரையரங்குகளில் ரிலீஸ்!
தமிழகம் முழுவதும் துணிவு படம் கிட்டத்தட்ட 480 திரையரங்குகளில் வெளியாகிறது. உலகத்தின் மிகப்பெரிய திரையரங்கான பிரான்ஸ் நாட்டில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கில் இரவு 12 மணிக்கு துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படுகிறது. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 26 நிமிடம் ஆகும்.
அந்தர் பல்டி அடித்த சரத்குமார்: அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான், அமிதாப் பச்சனும் சூப்பர் ஸ்டார் தான்!