23 ஆண்டுகளுக்கு பின், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா இன்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு, சுவாமியை தரிசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், குடமுழுக்கு விழாவில், வேத மந்திரங்களை தமிழில் மட்டுமே புரோகிதர்கள் உச்சரிக்க வேண்டும் என, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு விழாவில் மந்திரங்களை உச்சரிக்கலாம் என தீர்ப்பளித்தது.

எனினும் தமிழில் மட்டுமே வேத மந்திரங்கள் உச்சரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இயக்குனர் கௌதமன் ஏற்கனவே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களிடம் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் வேத மந்திரங்கள் சொல்லலாம் என, தீர்ப்பு வந்ததை தொடர்ந்து இயக்குனர் கௌதான் தஞ்சையில் உண்ண விரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் அங்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் அவர் செல்லும் வழியிலேயே போலீசார் அவரை உளுந்தூர் பேட்டை அருகே தடுத்து நிறுத்தி கைதி செய்துள்ளது செய்துள்ள சம்பவத்திற்கு அவருடைய ஆதரவாளர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.