கடந்த 2020ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், அந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் தேசிங்கு பெரியசாமி.

தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்திய இயக்குனர்களில் தேசிங்கு பெரியசாமியும் ஒருவர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் வித்தியாசமான கதை அமைப்பு அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையல்ல.

இந்த படத்தை பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தனக்கும் ஒரு கதை செய்ய வேண்டும் என்று தேசிங்கு பெரியசாமியிடம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்த, பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி அகத்தியன் அவர்களை திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

காசுக்காக இயக்குனர் பாலா மனைவியின் அபாஷன் நாடகம்! MP-யுடன் கள்ள உறவு.. புட்டு புட்ட வைத்த காயத்திரி தேவி!

இந்நிலையில் மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது பிரபல நடிகர் சிலம்பரசன் நடிக்கவிருக்கும் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்த படத்திற்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில், சில சிறப்பு பயிற்சிகளை எடுக்க சிம்பு வெளிநாடுகளுக்கு சென்று திரும்பி உள்ளார். 

அடுத்த மாதம் இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் துவங்க அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளராக உள்ள உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள், இந்த திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் இரு வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹிஸ்டாரிக்கல் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

'பிரிந்தது உடல் தான்'... ரொமான்டிக் புகைப்படத்துடன் இறந்த கணவர் குறித்து ஸ்ருதி ஷண்முக பிரியா போட்ட பதிவு!