director cs amudan trolled thalapathy 62 movie and big boss in his tweet
சின்னத்திரையில் தற்போது வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நேற்று தான் முதல் சண்டை வெடித்தது. இந்த சண்டைக்கு காரணம் என்னவோ நித்யாவின் ஈகோ தான். ஆனால் அது ஆரம்பித்தது வெங்காய விஷயத்தில் தான்.
பாலாஜி காரட் பொரியலில் வெங்காயம் சேர்க்க சொன்னதற்கு, நித்யா அவரை கண்டு கொள்ளாமல் வேலையை பார்த்தார். தொடர்ந்து அனைவரும் தங்களுக்கும் வெங்காயம் போட்ட பொரியல் வேண்டும் என கேட்டதற்கும், தான் சமைக்கும் போது தன் விருப்பபடி தான் சமையல் இருக்கும். என கூறி வெங்காய பிரச்சனையால் சண்டையை கிளப்பி விட்டார்.
இதனை கேலி செய்யும் விதமாகவும், ”தளபதி 62” திரைப்படம் கூறித்து வந்த வதந்தி ஒன்றை கேலி செய்யும் விதமாகவும், ”தமிழ்படம் 2.0” இயக்குனர் சி.எஸ்.அமுதன் ஒரு டிவீட் செய்திருக்கிறார். சமீபத்தில் ”தளபதி 62” திரைப்படத்தின் பெயர் ”வேற லெவல்” என ஒரு வதந்தி கிளம்பியது. அப்படி ஒரு டைட்டிலை ”தளபதி 62” படத்திற்கு வைக்கவில்ல. என அந்த படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
Enakku vengayamey theva illa, carrot a appadiye chaapiduven #OreyLevelpic.twitter.com/79P4CMY5FI
— C.S.Amudhan (@csamudhan) June 20, 2018
இதனை அமுதன் தனது டிவிட்டரில்” எனக்கு வெங்காயமே தேவை இல்ல..! கேரட்டை அப்படியே சாப்பிடுவேன்” ”ஒரே லெவல்” என கேலி செய்திருக்கிறார்.
