Asianet News TamilAsianet News Tamil

cheran tweet : சொந்த மண்ணில் கலவரம்..ட்வீட் போட்டு பதறிய பிரபல இயக்குனர் சேரன்..

cheran tweet : இத்தனை வருடங்கள் இல்லாத நிகழ்வு என் கிராமத்தில் நடந்திருப்பது மனதை புண்படுத்துகிறது.. அங்கே எல்லோரும் இதுவரை தாய் பிள்ளைகளாக சாதி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள்..  என சொந்த ஊர் கலவரம் குறித்து இயக்குனர் சேரன் ட்வீட் செய்துள்ளார்.

director cheran tweet about Riot..
Author
Chennai, First Published Jan 19, 2022, 5:25 PM IST

ஒரு துணை இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர்... 'புரியாத புதிர்' படத்தின் சிறு கதாபாத்திரத்திலும் நடித்து ஒரு நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவர் சேரன்.இதை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு, நடிகர் பார்த்திபன் - மீனா நடித்த, 'பாரதி கண்ணம்மா' படத்தை இயக்கி, முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார். தொடர்ந்து 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து' போன்ற படங்களை இயக்கியது மட்டும் இன்றி, ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஆட்டோகிராப்' படத்திற்கு பின் இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார். அங்கு லாஸ்லியா - சேரனுக்கு இடையே இருந்த அப்பா... மகள்... உறவு பார்பவர்களையே நெகிழ வைத்தது. தற்போது திரைப்படங்கள் இயக்காமல் 'ராஜாவுக்கு செக்' மற்றும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

director cheran tweet about Riot..

சமீபத்தில் சினிமா உலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சேரனுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சேரனின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் பழையூர் பட்டி கிராமத்தில் பொங்கலன்று பயங்கர களவர் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் இடையேயான மோதலில் பலரும் காயமடைந்துள்ளனர்.

அச்சமடைந்த மக்கள் அவர்களை போலீசில் ஒப்படைக்க ஏற்பட்ட முயற்சியே திரித்து சொல்லப்பட்டிருக்கிறது.. தவறுகளை மறைத்து அவர்களை அடித்ததை மட்டும் சொல்லி புகாரை திசை திருப்பி இருக்கிறார்கள்.. இப்போது காவல்துறையும் பெரியவர்களும் தலையிட்டு சரியானதை அறிந்து அதற்கான முடிவு தேடும் முயற்சியில் இருக்கிறார்கள்.. எப்படியோ எங்கள் மண்ணின் பெயர் காப்பாற்றப்பட வேண்டும்.. தவறுகள் கலையப்பட்டு, உணர்த்தப்பட்டு.  நல்லவர்கள் தண்டிக்கப்படாமல் பகை மேலும் வளராமல் சுமூகமாக மாறினால் போதும்..  சிறுவர்களை இளைஞர்களை தவறான வழிக்கு திசை திருப்புவதை தடுக்க வேண்டும்..  என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios