தமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வைத்த தரமான கோரிக்கை... நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
அதுமட்டுமின்றி சோசியல் மீடியா மூலமாகவும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வைக்கப்படும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக மக்களின் குறைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்வு காண்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனித்துறையே உருவாக்கியுள்ளார். இந்த துறை மூலமாக இதுவரை 4.40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, மாவட்ட வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சோசியல் மீடியா மூலமாகவும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வைக்கப்படும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் கேன் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரின் தரம் குறித்து ஆராய வேண்டுமென தமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “சென்னை மற்றும் பெருநகரங்களில் வாழும் மக்களுக்கு குடி தண்ணீர் மற்றும் சமையலுக்கான தண்ணீர் பெரும்பாலும் கேன் வாட்டர் சப்ளை மூலமாகத்தான் விலைக்கு கிடைக்கிறது.. தினசரி பயன்பாட்டில் முக்கியமானதான தண்ணீரின் தரம் சோதிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள எந்த வழியும் பயன்பாட்டாளருக்கு இல்லை.
சுத்தமான தண்ணீராக இல்லையெனில் அதுவே நோய் பரவுவதற்கான முதல் காராணமாக மாறும். அரசு இதற்கான ஒரு முக்கிய முடிவு எடுத்தல் முன்னேற்பாடாக இருக்கும். பரிசோதனையும் அரசு முத்திரையும் இருக்கும்படியான அனுமதி வாங்குதல் வழங்குதல் அவசியம் என பதிவிட்டுள்ளார். அத்தோடு அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ட்விட்டர் கணக்குகளுக்கும் டேக் செய்துள்ளார். கொரோனா பெருந்தொற்று நேரத்திலும் பம்பரமாய் சுழன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குநர் சேரன் வைத்துள்ள இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.