உலக நாடுகளை கடந்து தற்போது இந்திய மக்களை அச்சுருத்தி வரும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே போல் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக, பிரதமரின் நிதிக்கும், முதலமைச்சர்கள் நிதிக்கும் பல்வேறு பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பாரதி ராஜா, கொரோனா வைரஸின்  அசாதாரண நெருக்கடியையும் பொருட்படுத்தாது, இந்த கொடிய நோயின் பரவலை திறம்பட கட்டுப்படுத்த போராடி வரும்  தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய  நன்றியுணர்வின் ஒரு சிறிய அடையாளமாக காவல்துறையினர், கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் ஹான்ட் வாஷ் போன்றவற்றை வழங்கியுள்ளார்.