Asianet News TamilAsianet News Tamil

Director Balaji Sakthivel : காதல் பட இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் தந்தை மரணமடைந்த செய்தி அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Director Balaji Sakthivel father passed away
Author
Tamil Nadu, First Published Dec 30, 2021, 1:20 PM IST

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து, பின்னர் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'சாமுராய்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி சக்திவேல். இவர் இயக்கும் படங்கள் வழக்கமான கமர்ஷியல் படங்களை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும், இயல்பாகவும் இருந்தது இவரை ரசிகர்கள் மத்தியில் தனியாக அடையாளப்படுத்தியது.

குறிப்பாக இவர் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான 'காதல்', தமன்னா நடித்த 'கல்லூரி', மனிஷா யாதவ் நடித்த 'வழக்கு எண் 18 / 9 ' ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வழக்கு எண் 18 / 9 படத்திற்காக தேசிய விருது, உட்பட பல விருதுகளைப் பெற்றார். இதைத்தொடர்ந்து, 'யார் இவர்கள்',  'ரா ரா ராஜசேகர்' ஆகிய படங்களை இயக்க உள்ளதாக அறிவித்தார் பாலாஜி சக்திவேல். பின்னர் அந்த படங்கள் கிடப்பில் போடப்பட்டது. 

Director Balaji Sakthivel father passed away

சமீபத்தில் இயக்குனர் என்பதைத் தாண்டி, 'அசுரன்' , 'வானம் கொட்டட்டும்' ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியில் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை இயக்குனர் பாலாஜி சக்திவேலின் தந்தை சக்தி வடிவேல் காலமானார். இதையறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios