இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள் என அனைவருமே.. சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக உள்ளனர். ஆனால் சில இயக்குனர் இதுபோன்ற சமூக வலைத்தளங்களை விரும்புவது இல்லை. அந்த வகையில் இது நாள் வரை ட்விட்டர் போன்ற எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமல் இருந்த இயக்குனர் பாலா, ட்விட்டர் கணக்கு ஒன்றை ஓபன் செய்துள்ளார். 

1999 ஆம் ஆண்டு, தமிழில் நடிகர் விக்ரமை வைத்து 'சேது' என்கிற திரைப்படத்தை இயக்கி, நடிகர் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது மட்டும் இன்றி, தேசிய விருதுக்கும் சொந்தக்காரராகியவர் பாலா. தன்னுடைய முதல் படத்திலேயே... தேசிய விருது மட்டும் இன்றி பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தார். 

இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான, அனைத்து படங்களும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரே மாதிரி கதைகளை இயக்காமல், திரைப்படங்களிலும், கதாபாத்திரங்களையும், மெருகேற்றுவதில் கை தேர்ந்தவர். அந்த வகையில், பாலா இயக்கத்தில் 'நந்தா' திரைப்படம் சூர்யா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்று கூறலாம். 

மேலும் பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களாகவே உள்ளது. கடைசியாக, விக்ரம் மகன் துருவை வைத்து, இவர் இயக்கிய 'வர்மா' திரைப்படம் ஒரு சில காரணங்களால் திரையரங்கில் ரிலீஸாகவில்லை என்றாலும், நீண்ட நாட்களுக்கு பின், ஓடிடி தளத்தில் வெளியானது.

நவீன மயமான இந்த உலகில், இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள் என அனைவருமே.. சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக உள்ளனர். ஆனால் சில இயக்குனர் இதுபோன்ற சமூக வலைத்தளங்களை விரும்புவது இல்லை. அந்த வகையில் இது நாள் வரை ட்விட்டர் போன்ற எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமல் இருந்த இயக்குனர் பாலா, ட்விட்டர் கணக்கு ஒன்றை ஓபன் செய்துள்ளார். 

இதில் தன்னுடைய முதல் பதிவாக "மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, 'தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள்' என்று கேட்டுக்கொண்டீர்கள். ஆனாலும் இதை தவிர்க்க முடியவில்லை. தங்கள் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள், அனைத்தும் மனித நாகரீகத்தின் உச்சம்".

வானோங்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்.
கோனோங்கி வாழுங் குடி என தெரிவித்துள்ளார். என்கிற குரலுடன் தன்னுடைய வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.

Scroll to load tweet…