‘அவன் இவன்’ படத்தில் ஜமீன்தார்கள் குறித்து அவதூறான காட்சிகள் வைத்தது தொடர்பான வழக்கில் இன்று நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார் இயக்குநர் பாலா. எட்டு வருடங்களாக நடந்துவரும் வழக்கு இது.

‘அவன் இவன்’ படத்தில் ஜமீன்தார்கள் குறித்து அவதூறான காட்சிகள் வைத்தது தொடர்பான வழக்கில் இன்று நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார் இயக்குநர் பாலா. எட்டு வருடங்களாக நடந்துவரும் வழக்கு இது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விஷால்,ஆர்யா நடிக்க ‘அவன் இவன்’ என்ற படத்தை 2011ல் இயக்கியிருந்தார் பாலா. இப்படத்தில் ஜமீன்தார்கள் தரைமட்டத்துக்கு கிண்டலடிக்கப்பட்டார்கள். இதை ஒட்டி, தீர்த்தப்பட்டி ஜமீனின் வாரிசான சங்கர் ஆத்மஜன் இயக்குநர் பாலா மீதும் நடிகர் ஆர்யா மீதும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில் ஆஜராகாமல் பாலாவும் ஆர்யாவும் பலமுறை எஸ்கேப் ஆகிவந்த நிலையில் இருவர் மீதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அம்பாசமுத்திரம் வந்திருந்த பாலா நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வக்கீல்கள் மூலம் தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.