இயக்குனர் ஏ.எல்.விஜய் நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த பின், தன்னுடைய முழு கவனத்தையும், திரைப்படம் இயக்குவதில் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தல அஜித் நடித்த 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் விஜய்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான 'மதராசபட்டினம்' திரைப்படம், பல வருடங்களுக்கு முன் இருந்த சென்னை பட்டினத்தை கண் முன் நிறுத்தி பல விருதுகளையும் பெற்றது. 

இவர் நடிகர் விக்ரம் நடித்த 'தெய்வதிருமகள்' படத்தை இயக்கிய போது, இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை அமலாபாலுக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாக, விஜய் நடிப்பில் இவர் இயக்கிய தலைவா படத்தில், அமலாபால் கதாநாயகியாக நடித்தார்.

 

இதனால் இவர்களுடைய நட்பு காதலாக மாறி, அது திருமணத்திலும் முடிந்தது. திருமணத்திற்கு பின் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் வருடம் இருவரும் தாங்கள் மனம் ஒற்று விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த விஜய் முதல் முறையாக தற்போது வளர்ந்து வரும் கதாநாயகியான சாய் பல்லவியுடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். 

அதாவது, சாய் பல்லவி இவர் இயக்கத்தில் வெளியான 'கரு' படத்தில் நடித்த போது, இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. ஆனால் இது வதந்தியாக இருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது. உண்மை என்ன என்பது இவர்கள் விளக்கம் கொடுத்தால் மட்டுமே தெரியவரும்.