பிரபல நடிகை காவ்யா மாதவன் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின் பிரபல நடிகர் திலீப்பை பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது இவருக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது என்பதை அவருடைய கணவர் திலீப் கடந்த மாதம், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

மஞ்சு வாரியார் மற்றும் திலீப் இருவரும் கணவன் மனைவியாக வாழ்த்து கொண்டிருக்கும் போதே... காவியா மாதவன் மற்றும் திலீப் பற்றிய காதல் கிசுகிசுக்கள் மலையாள திரையுலகத்தை வட்டமிட்டது. அப்போது இது போல் வெளியான தகவல்களை இருவருமே மறுத்து வந்தனர்.

இவர்களின் ரகசிய காதல் குறித்து பிரபல நடிகை திலீப்பின் முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியரிடம் போட்டு கொடுத்ததால் தான், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வாங்கியதாகவும் கூறப்பட்டது. மேலும் இதற்காக போட்டு கொடுத்த பிரபல நடிகையை பழி வாங்க சில சம்பவங்களை அரங்கேற்றி சர்ச்சையில் சிக்கி, கைது செய்யப்பட்டார் திலீப்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கடந்த 2016 ஆண்டு நடிகை காவ்யா மாதவனை மகள் மீனாட்சி கண் முன்பே திருமணம் செய்து கொண்டார் திலீப். திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகிய நடிகை காவ்யா மாதவன்  குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தினார். 

இந்நிலையில் கடந்த மாதம், காவியா மாதவனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், சமீபத்தில் இவருடைய திலீப்பின் இரண்டாவது மகளுக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. ஆனால் பெயர் வைக்கும் பொறுப்பை திலீப் தன்னுடைய முதல் மகள் மீனாட்சியிடம் ஒப்படைத்தார். மீனாட்சி தன்னுடைய தங்கைக்கு மகாலட்சுமி என்று பெயர் வைத்துள்ளார். வித்தியாசமாக யோசித்து, வாயில் நுழையாத பெயர்களை வைத்து வரும் நிலையில் இவர் 'மகாலட்சுமி என்று பெயர் வைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.