வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் உள்ளிட்டோர் ஏற்கனவே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் பலரும் தங்களது சம்பளத்தை குறைத்து வரும் நிலையில், விஜய் மற்றும் ரஜினி சம்பளத்தை உயர்த்தியதாகவும், அஜித் மட்டும் என்னுடைய சம்பளத்தை உயர்த்தி வேண்டாம் என உத்தரவு போட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் - ஹெச்.வினோத் - அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் வலிமை படக்குழு ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. வலிமை படத்திற்கு ஆரம்பத்தில் 55 கோடி ரூபாய் பேசிய தல அஜித், படப்பிடிப்பு பணிகள் ஆரம்பிக்க தாமதமானதை அடுத்து தன்னுடைய சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.