தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற அவர் பேட்டி அளித்துள்ளார்.

இதில், நான் இயற்கையாகவே கடின உழைப்பாளி. நான் எங்கு வேலை செய்கிறேனோ அவர்கள் பேசும் மொழியை கற்பது என் கடமை. தெலுங்கு திரையுலகில் பணியாற்றத் துவங்கியதும் அந்த மொழியை கற்கத் துவங்கிவிட்டேன்

நான் ஒரு தென்னிந்திய நடிகை. நான் வடக்கில் இருந்து வந்ததாக மீடியாக்கள் சிலசமயம் கூறுவது வேதனையாக உள்ளது. நான் ஒரு தெலுங்கு அம்மாயி. தெலுங்கு பேசுபவர்களை எங்காவது பார்த்தால் உடனே நானும் தெலுங்கில் பேசுகிறேன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம் அதில் மசாலா இருக்கிறதே. இது ஆண் ஆதிக்கம் மிக்க உலகம். இயற்கையாகவே மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள்.

இதுவரை நான் அப்படி பட்ட விஷயம் எதுவும் ஆகவில்லை இதுவரை யாரும் என்னிடம் அப்படி நடக்கவில்லை. சினிமா என்றாலே மக்களுக்கு ஒரு வித தவறான உணர்வுகள் அது தான் இப்படி நினைக்கத்தோணுது என்றார்.

ஆபாச பட வலை தளங்கள் பற்றி தமிழில் ஒரு படமா?

தமிழில் வெளியான ‘தோனி’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர். இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் “எக்ஸ் வீடியோஸ்”. பிரபல ஆபாச வலைதளமான எக்ஸ் வீடியோவை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து இயக்குனர் சஜோ சுந்தர் கூறும்போது, “ஆபாசமான படங்களை எக்ஸ் வீடியோஸ் என்ற வலைத்தளம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வலைதளத்திற்கு எதிராக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. யூ-டியூப் போன்று எக்ஸ் வீடியோஸ் வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் வீடியோ பதிவு செய்யலாம்.உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானாலும் இளைய தலைமுறையினர் செய்யும் தவறுகள் அனைத்தும் எக்ஸ் வீடியோஸ் வலைதளத்தில் அரங்கேறி வருகிறது.

எக்ஸ் என்பது எதை வேண்டுமானாலும் குறிப்பிடலாம். ஆனால், இங்கு எக்ஸ் என்று சொல்லும் போது தவறான வீடியோக்களாக மட்டுமே புரிந்துக் கொள்ளப்படுகிறது. ஆபாச வலைத்தளம் குறித்து தனித்தனியாக ஒருவரிடம் சென்று சொல்ல முடியாத காரணத்தால் படமாக எடுக்க முடிவு செய்தேன். சமூக அக்கறையுள்ள படம் தான் இந்த ‘எக்ஸ் வீடியோஸ்’ படம்.

எக்ஸ் என தலைப்பு இருப்பதால் ஆபாச படம் இல்லை. கதாநாயகன் எக்ஸ் வீடியோஸ் வலைத்தளத்தால் பாதிக்கப்படுவதால், அதை எதிர்த்து போராடுவது தான் இந்த படத்தில் கதை. இதுபோன்ற இணையத்தளங்கள் எப்படி செயல்படுகிறது. பொதுமக்களை எப்படி குறி வைக்கிறார்கள் என்பது இப்படத்தில் காண்பித்து இருக்கிறோம்.

இப்படத்தில் படுக்கை அறை போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் எதுவும் இல்லை. பெண்கள் பாதுகாப்பு குறித்து இப்படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.

மேலும், இப்படம் வெளியாவதற்கு முன்னதாக எக்ஸ் வீடியோஸ் ஆபாச வலைத்தளம் குறித்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர போவதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.