நோட்டீஸ் அஜீத் வீட்டிற்கு போயிருக்கிறது. அதனால்தான் ’’நீங்கள் பணம் புரட்ட நான் தான் கிடைத்தேனா?’’எனக் கூறி கதவை சாத்தி விட்டாராம் அஜித்.

அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களை படம் எடுப்பது வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல, பணத்தை திரட்டுவதற்கும் தான். பெரிய நடிகர்களின் கால்ஷீட் இருந்தால் கோடிகளில் பைனான்ஸ் கிடைக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்படித்தான் கோடிகளில் புரண்டார் ஏ.எம்.ரத்னம். அவர் தயாரிப்பில் அஜீத் மூன்று படங்களில் நடித்துக் கொடுத்துள்ளார். இவருக்கும் இடையில் விரிசல். ஆனாலும் ஏ.எம்.ரத்னம் கஷ்டத்தில் இருந்த போது மீண்டும் அழைத்து தயாரிப்பு பணியில் ரீ என்ட்ரி கொடுத்தவரே அஜீத்துதான். இருந்தாலும் அந்த கூட்டணி சட்டென பிரிந்தது.

மீண்டும் அதை புதுப்பிக்க நினைக்கிறாராம் ஏ.எம்.ரத்னம். அங்குதான் ஒரு நோ என்ட்ரி போர்டு வைத்துவிட்டார் அஜீத். ஏன் தெரியுமா? கடைசியாக நடித்த படத்தின் சம்பளத்திற்கான டி.டி.எஸ் தொகை சுமார் 68 லட்சத்தை கட்டவேயில்லையாம் ஏ.எம்.ரத்னம். நோட்டீஸ் அஜீத் வீட்டிற்கு போயிருக்கிறது. அதனால்தான் ’’நீங்கள் பணம் புரட்ட நான் தான் கிடைத்தேனா?’’எனக் கூறி கதவை சாத்தி விட்டாராம் அஜித்.