சரி அப்படின்னா கோப்ரா படத்தின் பட்ஜெட் எகிற யார் காரணம்? என்று எல்லோருக்குள்ளும் கேள்வி எழலாம். இதை இயக்குநர் வட்டாரத்தில் விசாரித்தால் ஹீரோ விக்ரமை நோக்கி ரகசியமாக கை நீட்டுகிறார்கள். 

‘கோப்ரா’ன்னு படத்துக்கு டைட்டிலை வெச்சுக்கிட்டு, கடிக்கலேன்னா எப்படி? சீயான் விக்ரம் நடிக்க, அஜய் ஞானமுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கியிருக்கும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்தேவிட்டது. ஆனால், முடியும் போது பெரும் பஞ்சாயத்தோடு முடிந்துள்ளது. 

அதாவது இப்படம் உண்மையிலேயே மிகப்பெரிய சவாலான படம்தான். காரணம், எக்கச்சக்க கெட்-அப்களில் இதில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்தின் தும்பி! பாடல் ஏற்கனவே மரணமாஸ் ஹிட் அடித்துவிட்டது. இந்நிலையில் ஷூட் முடிந்ததற்கு அனைவருக்கும் தன் சோஷியல் மீடியா பக்கங்களில் நன்றி சொன்ன அஜய், அப்பட தயாரிப்பாளர் லலித்குமாருக்கு குறிப்பிட்டு நன்றி சொல்லவில்லை. 

இது சர்ச்சையாக, தயாரிப்பாளர் டி.சிவா ‘போட்ட பட்ஜெட்டை விட, பல மடங்கு செலவை இழுத்துவிட்டுள்ளார் இயக்குநர். அதைத்தாங்கிக் கொண்டு படத்தை முடித்துக் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர். அப்படிப்பட்டவருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாக கண்டிக்கிறேன்.’ என்று செம்ம தாக்கு தாக்கிவிட்டார். 

இதற்கு அஜய் ஞானமுத்துவோ ‘படத்தின் பட்ஜெட் அதிகமானதுக்கு நான் காரணமில்லை. இதை என்னால் நிரூபிக்க முடியும். புரளிகளை விட ஆதாரங்கள் தெளிவாக பேசும். குழுவுக்கு நன்றி! என்றால், அது தயாரிப்பாளருக்கும் சேர்த்துதான். நான் என்றும் அவரை கைவிடவில்லை.’ என்று கெத்தாக பதில் தந்துள்ளார். 

சரி அப்படின்னா கோப்ரா படத்தின் பட்ஜெட் எகிற யார் காரணம்? என்று எல்லோருக்குள்ளும் கேள்வி எழலாம். இதை இயக்குநர் வட்டாரத்தில் விசாரித்தால் ஹீரோ விக்ரமை நோக்கி ரகசியமாக கை நீட்டுகிறார்கள். பல வித கெட் அப்கள் என்பதால் அதற்காக உடலமைப்பு, முடி அமைப்பு எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் விக் வைக்கலாம், மேக்-அப்பில் மாற்றலாம் என்றாலும் சில கெட்-அப்களுக்காக ஒரிஜினலாகவே மெனெக்கெட்டாரம் விக்ரம். இதனால் நாட்கள் இழுத்ததாம். 

அதுமட்டுமில்லாமல், இந்தப் படத்தின் ஷூட்டிங் போகும்போதே, பாலா இயக்கத்தில் தன் மகன் துருவ் நடித்த பட பஞ்சாயத்தில் விக்ரம் மூழ்கியதும், அதன் பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘மகான்’ படத்தில் மகனோடு சேர்ந்து நடிக்க ஓவர் ஈடுபாடு காட்டியதுமே இப்படத்தின் ஷூட்டிங் இழுக்க காரணம்! மகனுக்காக கோப்ராவை அடித்து, காயப்படுத்தி துவம்சம் செய்துவிட்டார். இல்லேன்னா இப்படம் எப்பவோ முடிஞ்சு, ரிலீஸாகி, செம்ம ஹிட்டடித்திருக்கும்! ஏன்னா, விக்ரமின் நடிப்பு இதில் அப்படி! என்கிறார்கள். மகனை ஹிட்டடிக்க வைக்கும் முயற்சியில் கோப்ராவுக்கு முறையான ஒத்துழைப்பை சீயான் தரவில்லை. இது தயாரிப்பாளருக்கும் தெரியும். ஆனால், மிக முக்கிய நடிகரான அவரை திட்ட இரு தரப்புக்கும் மனதைரியம் இல்லாததால் இப்படி பரஸ்பரம் திட்டிக் கொள்கிறார்கள்.’ என்கிறார்கள். 

வெற்றிக்குப் பின் இருக்கும் வலியை அறிந்த சீயானே இப்படி பண்லாமா?