ஒரு காலத்தில் விஜயகாந்த் மற்றும் ராதிகா பற்றி வந்த வதந்திகள் அனைத்துமே உண்மைதான் என பிரபல இயக்குனர் ஒருவர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மட்டுமே உச்ச நட்சத்திரங்களாக இருந்த காலத்தில் விஜயகாந்த் தன்னுடைய நிலையை அசாத்திய நடிப்பின் மூலம் உயர்த்தினார்.தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு சொல்ல கூடிய நடிகராக விஜயகாந்த் நல்ல புகழ் பெற்றார்.

அவருக்கு பெரும்பாலும் ஜோடியாக நடித்தவர் ராதிகா தான்.மேலும் கிராமத்து ஆளாக இருந்த விஜயகாந்தை ஸ்டைலிஷ் மன்னராக மாற்றியது ராதிகாதான் என அப்போதே செய்திகள் வெளிவந்தது. விஜயகாந்த் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணம் நடக்க இருந்த நேரத்தில் பத்திரிகைக்காரர்கள் செய்த குழப்பத்தால் திருமணம் தடைபட்டதாம்.

இதனால் ராதிகா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்த் கிடைக்காத விரக்தியில் ராதிகா தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.