பிரபல நடிகர் விக்ரமை தொடர்ந்து அவருடைய மகன் துருவ்வும் தற்போது கதாநாயகனாக தமிழ் சினிமாவில் களமிறங்கி உள்ளார். இவரின் முதல் படமாக உருவான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்கை இயக்குனர் பாலா 'வர்மா' என்கிற பெயரில் ரீமேக் செய்தார்.

ஆனால் இந்த படம், எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என கூறி, தயாரிப்பு நிறுவனம்... மற்றொரு இயக்குனரை வைத்து இயக்க உள்ளதாக அதிரடியாக அறிவித்தது.  இதனால் படப்பிடிப்பு முழுவதும் முடிவந்த நிலையிலும், இந்த படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டது.

இயக்குனர் பாலாவும், துருவ்வின் எதிர்காலம் பற்றி சிந்தித்து இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

எனவே, தற்போது துருவ் நடிப்பில் 'ஆதித்ய வர்மா' என்கிற பெயரில்... 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இதில் துருவ் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அவருக்கு தந்தையாக இயக்குனர் கெளதம் மேனன் நடித்து வருவதாக கடந்த ஓரிரு தினத்திற்கு முன் அறிவிப்பு வெளியானது.  

இந்நிலையில் துருவ் மற்றும் விக்ரம் இருவரும் ஒரே கெட்டப்பில் இருப்பது போல் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி,  அந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்து, ரசிகர்கள் இருவரும் அப்பா - மகனாக இருந்தாலும் இருவருக்கும் வயதில் வித்தியாசம் தெரியவில்லை என கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அந்த புகைப்படம் இதோ:

 

View this post on Instagram

Sync 💮

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on Mar 22, 2019 at 9:31am PDT