தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்த படத்திற்கு ஏற்பட்ட வரவேற்பை தொடர்ந்து, இப்படத்தை இந்தி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டினர் தயாரிப்பாளர்கள்.

அந்த வகையில், இந்தியில் இப்படம் 'கபீர் சிங்' என்கிற பெயரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ள இந்த படத்தை E4 Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இடம்பெற்றுள்ள 'எதற்கடி வலி தந்தாய்' என்கிற லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த பாடலை விவேக் எழுத, துருவ் விக்ரம் பாடியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ரதன். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் கிரீசையா இப்படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில், படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முழுவதும் முடிவடைந்து திரைப்படம் எதிர்பார்த்தபடி இல்லை என்கிற காரணத்தால் இப்படம் கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.