நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு ஒருவழியாக தற்போது விடிவுகாலம் வந்துள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைல் பிளேசர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரமை வைத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், பட்ஜெட் பிரச்சனை காரணமாக முழுமையாக படப்பிடிப்பு நடைபெறாமல் நின்றதாக கூறப்பட்டது. சில வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட இந்த படம் குறித்து, தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்ததன் விளைவாக மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்தது.

அந்த வகையில், சமீபத்தில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு... மீதமிருந்த காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்த திரைப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 'துருவ நட்சத்திரம்' படத்தின் சென்சார் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டது. நிறைய சண்டை காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதால் இப்படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

அடுத்த குணசேகரன் யார்? சஸ்பென்ஸ் உடைக்க தயாரான இயக்குனர்.. பரபரப்பான எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்!
மேலும் இன்று 11 மணிக்கு இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், சற்று முன்னர், விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத டபுள் டமாக்காவாக, ரிலீஸ் தேதியுடன், புல்லரிக்கும் விதத்தில்... விக்ரமின் செம்ம ஃபைட் சீனுடன் கூடிய ட்ரைல் பிளேசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் தற்போது விக்ரம் ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளது மட்டும் இன்றி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் , ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்க, Ondraga Entertainment இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
