மகான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துருவ் விக்ரம் (Dhruv Vikram), நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) உடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' (adithya varma) படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இது தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' (Arjun Reddy) படத்தின் தமிழ் ரீமேக்காகும். 'ஆதித்ய வர்மா' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இதையடுத்து தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ (mahaan) படத்தில் நடித்து முடித்துளார் துருவ் விக்ரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படம் இன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துருவ், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடனான நட்பு குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது: “சின்ன வயசில் இருந்தே விஜய் (vijay) சாருடைய மகன் சஞ்சய் எனது நண்பன் தான். அவர் நல்ல கதையுடன் வந்தால், அவர் டைரக்ஷன்ல நடிக்க தயாராக இருக்கிறேன். பாலிவுட் மாதிரி இங்கும் இரண்டு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது அமையும்” என துருவ் கூறி உள்ளார்.

மகான் படத்துக்கு பின்னர் ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான மாரி செல்வராஜ் (Maari selvaraj) உடன் கூட்டணி அமைக்க உள்ளார் துருவ் விக்ரம். இப்படத்தில் அவர் கபடி வீரராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கிறார்.
