உலக அளவிலான வசூலில் ஓரளவு கெத்து காட்டியிருந்தாலும், தமிழக மண்ணில் அஜீத்தின் விஸ்வாசத்துக்கு அடுத்த இடம் தான் ‘பேட்ட’ படத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது ரஜினிக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டிருப்பதில் அவர் ரொம்பவே அப் செட்டில் இருப்பதாக தகவல்.

இந்நிலையில் ’பேட்ட’ படம் தான் முன்னிலை என்று காட்ட அவர் எடுத்த ஒரு சில முயற்சிகளும் படுதோல்வியில் முடிந்திருக்கின்றன. குறிப்பாக ‘நீங்க சொன்னா மொத்த இண்டஸ்ட்ரியும் சொன்ன மாதிரி’ என்று சர்டிபிகேட் கொடுத்து புரமோஷன் வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியும் வலைதலங்களில் வறுத்தெடுக்கப்படவே போதுண்டா சாமி என்று தெறித்து ஓடிவிட்டார்.

மாமனார் இப்படி அப்செட்டில் இருப்பதை சூசகமாக புரிந்துகொண்டோ என்னவோ வழக்கமாக ரஜினியின், அரசியல்,சினிமா குறித்து என்ன கேள்வி கேட்டாலும் அதிரடி பதில்கள் தரும் தனுஷ் நேற்று முதல் முறையாக வாயை மூடிக்கொண்டு ஓடிவிட்டார். ஒருவேளை, ’நமக்கு பொதுவா நேரம் சரியில்ல. அதனால என்னைப்பத்தி யார் எந்த கேள்வி கேட்டாலும் பதில் பேசாம சைலண்டா போயிடுங்க மாப்ள’ என்று ரஜினி சொல்லியிருக்கலாம்.

மேட்டர் இதுதான். ‘பேட்ட’ ரெண்டாவது வாரத்திலாவது லேட் பிக் அப் ஆகட்டும் என்ற வேண்டுதலோடோ என்னவோ நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றிருந்தார் தனுஷ். அவர் தரிசனம் முடிந்து திரும்புவதற்காக காத்திருந்த நிருபர்கள், ரஜினியின் அரசியல் பிரவேசம் மற்றும் ‘பேட்ட’ படம் குறித்த  சில கேள்விகளுடன் மைக்கை தனுஷ் முன் நீட்ட ‘நீங்க யாரு..நான் யாரு.. மைக் எதுக்கு? என்பது போல விநோதமாகப் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் நடையைக் கட்டினாராம்.