இந்த நிலையில், 'தர்பார்' படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு அருகே உள்ள மாதா மெடிக்கல் காலேஜில் திடீரென நடந்தேறியுள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளதன் மூலம் இது தெரியவந்துள்ளது. 

இதில், காக்கிச் சட்டையுடன் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் இருக்கும் ரஜினி, ரசிகர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்துகிறார். 
https://twitter.com/gunavivek/status/1201082221567676416


இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள், ஷுட்டிங்தான் முடிந்துவிட்டதாக சொன்னார்களே, பின்னர் ஏன் மீண்டும் யூனிஃபார்முடன் தலைவர் நடிக்கிறார் என சந்தேகம் அடைந்தனர். 

இதுகுறித்து நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, முழுக்க முழுக்க மும்பை மற்றும் வட மாநிலங்களில் படமாக்கப்பட்டு வந்த 'தர்பார்' படத்தின் சில பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே இங்கு ஷுட் செய்யப்பட்டதாகவும், படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
'சர்கார்' படத்தில், ஒவ்வொரு நோயாளியையும் காண்பித்து ஒவ்வொரு டிபார்ட்மென்ட் சரியாக இயங்கவில்லை என்பதை விஜய் சுட்டிக் காட்டும் காட்சி, மாதா மெடிக்கல் காலேஜில்தான் படமாக்கப்பட்டது.

தற்போது, அதே இடத்தில் ரஜினியின் தர்பார் பட பேட்ச் ஒர்க் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டமாக கூட, அவர்களை பார்த்து ரஜினி கையசைத்து உற்சாகப்படுத்திய வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
https://twitter.com/gowtham766/status/1201094330053623809


லைகா நிறுவனத்தின் மிகபிரம்மாமண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 25 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 

அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். 'பேட்ட' படத்தை தொடர்ந்து, தர்பாருக்கும் ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்