ரஜினி,ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் ‘தர்பார்’படம் குறித்து யாராவது தும்மல் ஒலி எழுப்பினால் கூட அது பரபரப்பான செய்தியாகிவரும் நிலையில் உண்மையிலேயே ஒரு பரபரப்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

’தர்பார்’படப்பிடிப்பின் மூன்றாவது ஷெட்யூல் மும்பையில் நடந்துவரும் நிலையில் சீனு ராமசாமி விஜய் சேதுபதி காமிபினேஷனில் ‘தர்மதுரை’ படத்தில் அறிமுகமாகி நடிப்பில் பலரது கவனத்தை ஈர்த்த திருநங்கை ஜீவா தற்போது இப்படத்தில் இணைந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி,...தர்மதுரை படத்தில் மக்கள் செல்வன் @VijaySethuOffl யுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று
 இன்று சூப்பர் ஸ்டார் தியானி @rajinikanth  அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி #திருநங்கையர்ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்’...என பகிர்ந்துள்ளார்.

இதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் ஜிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தர்பார் டீமுடன் இணைந்தார்.யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். ஒரு டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் நடிகராக அறிமுகமான யோக்ராஜ் பஞ்சாபி படங்களிலும் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.