சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'பேட்ட' படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது, மும்பையில் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ரஜினிகாந்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில சமூக வலைதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இதனால், தற்போது தீவிர கண்காணிப்பு மற்றும் செட்டில் பணி புரிபவர்கள் யாரும் செல்போன் ஆகியவை பயன்படுத்த கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் நடிகை நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நியூ லுக்கில் நடிகை நயன்தாரா தர்பார் படத்தில் தோன்றும் புகைப்படம் வெளியாகி படக்குழுவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் என்ன செய்வது என கடும் குழப்பத்தில் இருக்கிறாராம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தற்போது வெளியாகியுள்ள நயன்தாராவின் புகைப்படம் இதோ: