எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ரஜினியின் ஆருயிர் நண்பரான கமல் ஹாசன் தான் 'தர்பார்' படத்திற்கான தமிழ் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார். நாளை உலக நாயகனுக்கு பிறந்த நாள் என்பதால் ரஜினி, கமல் ரசிகர்கள் இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர்.மலையாள போஸ்டரை மல்லு சூப்பர் ஸ்டார் மோகன் லாலும், இந்தி போஸ்டரை சல்மான் கானும் ரிலீஸ் செய்ய உள்ளதாக தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது. 

நாளை வெளியாகிறது 'தர்பார்' மோஷன் போஸ்டர்... யாரெல்லாம் ரிலீஸ் பண்ண போறாங்க தெரியுமா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'பேட்ட' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு போலீஸ் கேரக்டரில் ரஜினி எண்ட்ரி கொடுக்க உள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, நிவேதா தாமஸ், ஜட்டின் சர்னா, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மும்பையில் தீவிரமாக ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், தற்போது பரபரபாக போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சிறப்பான வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

இதனிடையே 'தர்பார்' படத்தின் இசையமைப்பாளரான அனிரூத்தின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 5.30 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில், அந்தந்த மொழிகளின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் போஸ்டரை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது யாரெல்லாம் மோஷன் போஸ்டரை வெளியிடப்போவது என்ற அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ரஜினியின் ஆருயிர் நண்பரான கமல் ஹாசன் தான் 'தர்பார்' படத்திற்கான தமிழ் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார். நாளை உலக நாயகனுக்கு பிறந்த நாள் என்பதால் ரஜினி, கமல் ரசிகர்கள் இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர்.

Scroll to load tweet…


மலையாள போஸ்டரை மல்லு சூப்பர் ஸ்டார் மோகன் லாலும், இந்தி போஸ்டரை சல்மான் கானும் ரிலீஸ் செய்ய உள்ளதாக தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது. தெலுங்கில் சூப்பர் ஸ்டாரின் நண்பரான மெகா ஸ்டார் தான் போஸ்டரை வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தெலுங்கு போஸ்டரை வெளியிட உள்ளது யார் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. இதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வடிவமைத்துள்ள தயாரிப்பு நிறுவனம், அதில் கமல் ஹாசன், மோகன் லால், சல்மான் கான் ஆகியோரது உருவப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் நாளை 5.30 மணிக்கு தர்பார் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் ரஜினியின் கபாலி, காலா, பேட்ட படங்களின் மோஷன் போஸ்டர்கள் மில்லியன் கணக்கில் லைக்குகளை தெறிக்கவிட்டன. அதேபோன்று பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள தர்பார் பட மோஷன் போஸ்டரையும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.