Dhanush latest controversy going to end

நடிகர் தனுஷ் தொடர்ந்து தன்னுடைய முயற்சியால், நடிகர் என்கிறதையும் தாண்டி பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார்.

இப்படி தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வந்தாலும், இவரது சுற்றி பல சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் முக்கியமானது சிவகங்கையை சார்ந்த தம்பதியினர் தனுஷ் எங்கள் பிள்ளை என வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தொடர்பாக தனுஷ் கடந்த மாதம் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரது அங்க அடையாளங்கள் குறிப்புகளை மருத்துவர்கள் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான மருத்துவ அறிக்கையில் தனுஷ் உடலில் இருந்து அடையாளங்கள் நீக்கப்பட்டுள்ளது என ஒரு செய்தி வர, தனுஷிற்கு மிகவும் நெருக்கடியாக அமைந்தது.

ஆனால், தற்போது அந்த தம்பதியினரின் சிறு வயதில் ஓடி போனவன் மகன் கலையரசன் கிடைத்து விட்டானாம், அவனே போலிஸில் ஆஜராகியுள்ளான். இதனால், பல நாட்களாக சுற்றி வந்த பிரச்சனை தனுஷிற்கு ஒரு வழியாக தீர்ந்தது என கூறப்படுகின்றது.