dhanush vadachennai movie teaser released
நடிகர் தனுஷின் 35வது பிறந்த நாள் ஸ்பெஷலாக, வட சென்னை படத்தின் டீசர் இன்று சரியாக 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
வெற்றி மாறன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் வடசென்னை. பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி வடசென்னை படத்தில் கைகோர்த்துள்ளனர்.

சென்னையின் முப்பது ஆண்டு கால வரலாற்றை விவரிக்கும் விதமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் வெளியான வட சென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.
தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக, ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதத்தில் வெளியாகியுள்ள இந்த டீசர் தற்போது வைரலாகி உள்ளது.
டீசர் இதோ...
