dhanush tweet for vip 2 release

தனுஷ் நடிகர் என்பதை தாண்டி, பாடல், தயாரிப்பு, இயக்கம் என திரைத்துறை சார்த்த பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வெற்றி பெற்று வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த 'ப.பாண்டி' திரைப்படம்,' பாகுபலி' என்கிற சுனாமியில் சிறிதும் சேதம் இல்லாமல் பல திரையரங்கங்களில் மூன்று வாரங்களை கடந்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2014 ஆண்டு வெளியாகி, சூப்பர்ஹிட்டான 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருக்கும் தனுஷ், இந்த படத்தின் ரிலீஸ் குறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் மிக விரைவிலேயே 'விஐபி 2 ' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் இப்போதே இந்த படத்தை வரவேற்க தயாராகிவிட்டனர்.

மேலும் 'விஐபி 2 ' இரண்டாம் பாகத்திலும் தனுஷுக்கு ஜோடியாக, அமலாபால் தான் நடிக்கிறார், இந்த திரைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.