தனுஷ் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த ஒரு டுவிட் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. மேலும் அதை ஸ்வாரஸ்யமாக்க மாஸ் செய்தி ஒன்று வருகிறது என தெரிவித்தார்.
அது என்ன செய்தி என்று தெரிந்து கொள்ள புதன் கிழமை வரை காத்திருங்கள் எனவும் கூறியுள்ளார்.
நம் கோலிவுட் ரசிகர்களை பற்றி சொல்லவே வேண்டியது இல்லை காரணம், என்ன சஸ்பென்ஸ் வைத்திருப்பர் என மூளையை கசக்கி யோசித்து வருகின்றனர்.
சிலர் ஹாலிவுட் நடிகர் தனுஷுடன் நடிக்கிறார் என கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் செல்வராகவன் இயக்கத்தில் விஜய் நடிக்கின்றார், அந்த படத்தை தனுஷ் தயாரிப்பார் என கூறி வருகின்றனர்.
உண்மையில் தனுஷ் மனதில் உள்ளது என்ன செய்தி என தெரிந்து கொள்ள புதன்கிழமை வரை காத்திருப்போம்.
