தனுஷின் வாத்தி படத்துக்கு கடந்த வாரம் பூஜை போடப்பட்ட நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. 

திரையுலகில் ஆல்ரவுண்டர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார் நடிகர் தனுஷ். தமிழை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் திரையுலகிலும் கலக்கி வருகிறார். அதே போல் நடிப்பு மட்டும் இன்றி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல விதத்திலும் தன்னுடைய திறமையை நிரூபித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழில் இவர் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் வாத்தி என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் அறிமுகம் ஆகி உள்ளார். 

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. 

கடந்த வாரம் இப்படத்துக்கு பூஜை போடப்பட்ட நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இளமை தோற்றத்தில் நடிகர் தனுஷ் கெத்தாக நிற்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.