சுந்தர்.சி இயக்கத்தில் நிஜ காதலர்களாக இருந்த விஷால், வரலெட்சுமி நடித்த காமெடி பிளஸ் செம்ம கிளாமர் படமான மதகஜராஜா வை ஸ்ரெய்ட்டா சேனலில் ரிலீஸ் செய்து, பணம் பார்க்கும் முடிவிலிருக்கிறார் தயாரிப்பாளர். 

டெல்லி லாபி கொடுக்கும் அரசியல் அழுத்தத்தினாலேயே தொடர்ந்து அதிக படங்களில் தன்னை கமிட் செய்து கொள்ளும் முடிவை ரஜினி எடுத்துள்ளார் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள். தனது உடல் நிலை மற்றும் வயதை தாண்டி அவர் எடுத்துள்ள முடிவு இது! என்கிறார்கள். 

வடிவேலுவின் வெறித்தனமான பேட்டியின் பின்னணியில் தி.மு.க.வின் தேர்தல் வெற்றி உள்ளது! என்று பேசப்படுவதை ஸ்டாலின் விரும்பவேயில்லையாம். உதயநிதியின் படமொன்றில் வடிவேலுவை காமெடிக்கு கமிட் செய்யும் திட்டமும் இதனால் கைவிடப்பட்டதாம். 

பொதுவாக தல தளபதியோடு  நடிக்கையில், கேமெராவில் தான் இளமையாக தெரிகிறேனா? என்பதை  ஷாட் முடிந்ததும் மானிட்டர்  பார்த்து, பார்த்து  ஓ.கே. செய்வது நயன்தாராவின்வழக்கம். ஆனால் ரஜினியுடன் நடிக்கும் தர்பார் பட ஷூட்டிங்கில் அப்படி பார்ப்பதே இல்லயாம். 

கொலவெறி பாட்டு தேறி ஹிட் அடித்ததும், ரவுடி பேபி இணையத்தின் இன்னும் ரவுண்டு கட்டிக்கொண்டிருக்கும் குஷியில், தான் நடித்திருக்கும் ஆங்கில படத்தின் தமிழ் வெர்ஷனுக்காகவும் ஒரு பாடலை அப்லோட் பண்ணாராம் தனுஷ். ஆனால், நாலு, அஞ்சின்னு, சில லட்சங்களை தாண்டவே நாக்கு தல்லுதாம். 

புது சினிமா சம்பாத்தியம் இல்லாத நிலையில், அரசியல் கட்சியின் செலவு வேறு கமல்ஹாசனை நெருக்குகிறது. இதனால் பிக்பாஸ் சீசன் 3லும் கமிட் ஆகி கல்லா கட்டுகிறார் மனிதர். இது போதாதென்று, விளம்பர படங்களிலும் தொடர்ந்து தலைகாட்ட தொடங்கிட்டாராம். அந்த வகையில் சானிட்டரி தொடர்பான விளம்பரம் ஒன்றில்  சத்தமில்லாமல் நடித்து வருகிறாராம். 

கிளாசிக்கல் ஹிட் படமான நெற்றிக் கண் படத்தில் ரஜினிக்கு ஜோடி போட்டவரின் மகள்தான் கீர்த்தி சுரேஷ். விஜய் உடன் டபுள் டைம் ஜோடி போட்டுவிட்ட கீர்த்தியை எப்படியாவது ரஜினிக்கு ஜோடியாக்கிட வேண்டும்! என்று அவரது அம்மா ஆசைப்படுகிறார். அதனால், தர்பார் படத்துக்குப் பின் ரஜினி நடிக்கும் படங்களில் ஒன்றில் இந்த ஆசையை சக்ஸஸ் செய்திட வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறாராம்.