Asianet News TamilAsianet News Tamil

விஜய் யேசுதாஸ் படத்தில் வான்டடாக வாய்ப்பு கேட்டு பாடும் தனுஷ்!

dhanush sing for vijay jesudoss
dhanush sing for vijay jesudoss
Author
First Published Sep 26, 2017, 7:25 PM IST


 இயக்குனர் மணிரத்தினத்தின் துணை இயக்குனர், தனா இயக்கம் திரைப்படம் “படைவீரன்” . இந்த படத்தில் கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் நடிக்கிறார்.

மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் வேளையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தைப் பார்த்த தனுஷ், படத்தை வெகுவாகப் பாராட்டியதுடன், இந்த வெற்றிப் படத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டுமென விரும்பி ஒரு பாடலைப் பாடித் தருவதாகக் கூறி, உடனடியாக இயக்குனர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, விஜய் யேசுதாஸ் மற்றும் கவிஞர் பிரியனுடன் அமர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் கவிஞருக்கு இயக்குனர் தனா சூழ்நிலையை விளக்கி, கார்த்திக்ராஜாவின் அருமையான டியூனுக்கு  பிரியனின் வரிகளில்  “ லோக்கல் சர்க்கா பாரின் சரக்கா” என்ற படு துள்ளலான பாடலைப் பாடிக் கொடுத்தார் நடிகர் தனுஷ். 

ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை. இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios