‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தோடு சூப்பர் ஸ்டார் ரஜினியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சிம்பு, போகிற போக்கில் வாரிசு நாற்காலிக்கும் சேர்த்து குறி வைத்ததை அவரே மறந்தாலும் மற்றவர்கள் யாரும் மறப்பதற்கில்லை. எல்லா தகுதியும் இருந்தும், பொல்லாத கொடுங்குணத்தால் வாய்ப்பை தவற விட்ட சிம்புவுக்கு, காலம் தந்த புத்திமதி கொஞ்ச நஞ்சமல்ல. 

ஆனால் நடுவில் நுழைந்து, நிஜ வாரிசாக மாறிவிட்ட தனுஷ் இன்று இருக்கிற இடத்தை தக்க வைத்துக் கொண்டதுடன், அடுத்தடுத்து பறந்து கொண்டேயிருக்கிறார். அதை ஒரு புன் முறுவலோடு அதை ரசித்துக் கொண்டேயிருக்கிறார் ரஜினி. அவ்வப்போது தங்களது படங்களில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்குதல் டயாக்குக்குகளை அவிழ்த்து வந்தனர். 

சும்மா விடுவார்களா இருவரது ரசிகர்களும்... சமூக வலைதளங்களில் பிராண்டிக் கொள்வது வாடிக்கையாகத் தொடர்கிறது.  இப்போது தனுஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் மாரி-2 படத்தில் ஒரு டயலாக்.‘நான் கெட்டவனுக்கே கெட்டவன்டா...’ என்பார் தனுஷ். இதை கேட்ட சிம்பு ரசிகர்கள், ‘அண்ணே... அவரு உங்களைதான் சொல்றார்’ என்று சிம்புவிடம் புலம்புகிறார்களாம். கெட்டவன் என்ற படத்தையே சிம்பு டிராப் செய்துவிட்டார்.

 

இருப்பினும், அந்த கெட்டவன் டைட்டிலை மட்டும் அவரது ரசிகர்கள் மறந்தபாடில்லை. ஆனால் நிஜத்தில் நடப்பதே வேறு. தனக்கு ரெட் போட்ட விஷால் மீது செம எரிச்சலில் இருக்கும் சிம்பு, மாரி-2 பட விஷயத்தில் தனுஷும் விஷாலுக்கு எதிராக கிளம்பியதை சாதாரணமாக விடுவாரா? இருவரும் இணைந்த கைகள் ஆகியிருக்கிறார்கள். விரைவில் நடிகர் சங்கத்திற்கு நடக்கவிருக்கும் தேர்தலில் விஷாலுக்கு பலத்த எதிர்ப்பை காட்ட முடிவெடுத்து இருக்கிறார்களாம்.