dhanush report



கடந்த சில வருடங்களாக மதுரையை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி  தம்பதியினர், தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தங்களுடைய மகன் என வழக்கு தொடர்ந்து வாதாடி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக தனுஷ் தன்னுடைய பெற்றோருடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவருக்கு அங்க அடையாளங்கள் சரிபார்ப்பதற்காக மருத்துவர்கள் குறிப்பு கள் எடுத்தனர்.

இன்று தனுஷ் அங்க அடையாளங்கள் சரி பார்க்கப்பபட்டு, மதுரை மருத்துவமனை டீன் முன்னிலையில் 2 மருத்துவர்கள் அவரது அங்க அடையாளம் குறித்த ரிப்போர்ட்டை சமர்ப்பித்தனர்.

இதில் தனுஷ் உடலில் உள்ள சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அளித்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி தற்போது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது . மேலும் இதன் மூலம் தனுஷின் வழக்கில் மேலும் சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.