'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'தனுசு ராசி நேயர்களே'. இந்த படத்தின் மூலம், இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகிறார். 

ரொமாண்டிக் காமெடி கதையுடன் உருவாகும் இந்தப் படத்தில், 'பிகில்' படத்தில் முக்கிய ரோலில் நடித்த ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்கரவர்த்தி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில், 'தனுசு ராசி நேயர்களே' படத்திற்காக ஜிப்ரான் இசையில் 'ராக் ஸ்டார்' அனிருத் பாடியுள்ள ஒரு பெப்பியான பாடலை முதல் சிங்கிள் ட்ராக்காக படக்குழு வெளியிட்டுள்ளது. 

'I Want A Girl' என்ற அந்தப் பாடல் ஹீரோ ஹரீஷ் கல்யாணின் இண்ட்ரோ பாடலாம். இதனை, கு.கார்த்திக் எழுதியுள்ளார். அனிருத்துடன் ஜிப்ரானும் இணைந்து பாடியுள்ளார். படத்தில் ஹரீஸ் கல்யாண் ஆட்டம் போட்டிருக்கும் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள கேச்சிங்கான வரிகளும், துள்ளலான இசையும் ரசிகர்களையும் குதூகலப்படுத்தி வருகிறது.


ஏற்கெனவே, ஹரிஷ் கல்யாணின் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" படத்திற்காக அனிருத் பாடிய 'கண்ணம்மா' பாடல், ரசிகர்களை கிறங்கடித்ததுடன் இளைஞர்களின் காலர் ட்யூனாகவும் மாறியது. தற்போது, 'தனுசு ராசி நேயர்களே' படத்திற்காக அனிருத் பாடியுள்ள 'I Want A Girl' பாடலும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாக அமைந்துள்ளது. குடும்பத்துடன் கண்டு ரசிக்கும்படி ஜனரஞ்சகமன படமாக உருவாகிவரும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தை, நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.