நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, இவர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தற்போது அசுரன் மற்றும் துறை செந்தில் குமார் இயக்கி வரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழ் படங்கள் மட்டுமின்றி, பாலிவுட், ஹாலிவுட் வரை பிரபலமாகிவிட்டார்.  இந்நிலையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக, இன்று இவர் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் டைட்டில் 'பட்டாஸ்' என்று அறிவிக்கப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது தனுஷின் 'பட்டாஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி தனுஷ் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.  இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே, பல்லாயிரம் லைக்குகளை அள்ளி குவித்துள்ளது.