Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் விஜய் பட நாயகியுடன் ஜோடி சேர்கிறாரா தனுஷ்? வெளியே கசிந்த தகவல்..!

நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிக்க விஜய் பட நாயகியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 
 

dhanush pair with vijay movie heroine again?
Author
Chennai, First Published Jul 18, 2021, 7:03 PM IST

நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிக்க விஜய் பட நாயகியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர், சென்னைக்கு கூட வராமல் ஹைதராபாத்தில் தங்கி, இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் 'D43' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

dhanush pair with vijay movie heroine again?

இந்த படத்தை முடிந்த பின்னர்... நீண்ட இடைவெளிக்கு பின் தன்னுடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திலும், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திலும் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதை போஸ்டர் வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை நாராயணதாஸ் நரங் என்பவர் தன்னுடைய 4 ஆவது படமாக தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

dhanush pair with vijay movie heroine again?

இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக... 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டேவை  நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே, D 43 படத்தில், மாஸ்டர் பட நாயகியுடன் ஜோடி சேர்ந்த தனுஷ்... மீண்டும் விஜய் பட நாயகியோடு ஜோடி சேர உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதுவரை இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாக வில்லை என்றாலும்... இது நிஜமாக வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios