கடந்த 11 வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்துவரும் அண்ணன் செல்வராகவனுக்கு மீண்டும் ஒரு படம் இயக்கும் வாய்ப்புக் கொடுத்து கைதூக்கி விட்டிருக்கிறார் தம்பி தனுஷ். ’ஆனாலும் அண்ணனா இருந்தாலும் கியூவுல வாங்க’என்பது போல் ஏற்கனவே கமிட் பண்ணப்பட்ட இரு படங்களுக்குப் பின்னரே அவர் படத்துக்குக் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.அடுத்த ஆண்டின் மத்தியில் துவங்கவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2002 ‘துள்ளுவதோ இளமை’ மூலம் இயக்குநரான செல்வராகவன் ’காதல் கொண்டேன்’,’7 ஜி ரெயின்போ காலனி’’யாரடி நீ மோகினி’என்று தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் கொடுத்தார். ஆனால் ‘யாரடி நீ மோகினி’க்கு அடுத்து அவர் இயக்கிய மெகா பட்ஜெட் படங்களான ’ஆயிரத்தில் ஒருவன்’,’மயக்கம் என்ன’,’இரண்டாம் உலகம்’,கடைசியாக வெளியான சூர்யாவின் ‘என் ஜி கே’உட்பட அத்தனையும் படுதோல்விப்படங்கள்.

இந்நிலையில் மற்ற ஹீரோக்களிடம் கதை சொல்லப்போக முடியாது என்பதால் தம்பி தனுஷைத் தொடர்ந்து நச்சரிக்க ஆரம்பித்தார். கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருந்தாலும் அண்ணனை அம்போவென்று விட்டுவிடமுடியாதே? எனவே தனது இரு படங்கள் தயாரிப்புக்கு ஏற்கனவே முன்பணம் கொடுத்திருந்த தயாரிப்பாளர் தாணுவிடமே அண்ணனையும் தனுஷ் அனுப்ப, தாணுவும் அக்கூட்டணிக்கு உடனே ஓ.கே சொல்லிவிட்டார்.

வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க லண்டனுக்குச் சென்றுள்ளார் தனுஷ். அங்கு முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி, ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, திரும்பியவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கர்ணன்' படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதனையும் தாணுவே தயாரிக்கவுள்ளார். இந்த இரு படங்களும் 2020 மே அல்லது ஜூனில் முடியும் என்கிற நிலையில் அதற்கு அடுத்த படமாக செல்வராகவனின் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.