நடிகர் தனுஷ், கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தாலும், தற்போது, பாலிவுட், ஹாலிவுட் படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

தனுஷ் நடிப்பில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'The Extraordinary Journey of the Fakir ' படத்தை இந்தியாவில் வெளியிட உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இதில் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார் தனுஷ்.

இந்த விழாவில், ஹாலிவுட் படம் குறித்தும், அந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பேசிய பின், 'ராஞ்சனா' படத்தை தொடர்ந்து 6 வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு, பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த படத்தையும்  'ராஞ்சனா' படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல், தனுஷ் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.