Asianet News TamilAsianet News Tamil

சானியா மிர்சாவாக மாறுகிறாரா தனுஷ் பட நடிகை..?

சமீப காலமாகவே, தங்களது துறையிலும், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை கடந்து சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள், நடிகர் நடிகைகள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

dhanush movie actress trun to saniyamirsa biography movie
Author
Chennai, First Published Apr 2, 2021, 5:41 PM IST

சமீப காலமாகவே, தங்களது துறையிலும், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை கடந்து சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள், நடிகர் நடிகைகள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விரைவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் வெளியாக உள்ளது.

dhanush movie actress trun to saniyamirsa biography movie

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், பேட்மிண்டன் போட்டியின் மூலன் ஒட்டு மொத்த இந்திய மக்களையும் திரும்பி பார்க்கவைத்த, சானியா மிர்ஸா வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷுடன் 'ஆடுகளம்' படத்தில் நாயகியாக நடித்த டாப்ஸி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. 

dhanush movie actress trun to saniyamirsa biography movie

நடிகை டாப்சீ ஏற்கனவே 1999-ம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும், மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். மகளிர் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவின் சிறந்த வீராங்கனையாக பார்க்கப்படும் இவர் கிரிக்கெட் போட்டியில் 20 ஆண்டுகளைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற பெயரும் எடுத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

dhanush movie actress trun to saniyamirsa biography movie

 'சபாஷ் மித்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை  'லம்கே', 'பர்சானியா' மற்றும் 'ராயீஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராகுல் தொலாகியா இயக்கவுள்ளார். வயகாம் 18 நிறுவனம்  தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதை தொடர்ந்து, தற்போது மீண்டும் மற்றொரு விளையாட்டு வீராங்கனையில் வாழ்க்கை படத்தில் டாப்ஸி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் வரை கார்த்திருப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios