பொங்கல் விருந்தாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. அப்பா, மகன் என இருவேறு கெட்டப்பில் பொளந்து கட்டினார் தனுஷ். அதில் அப்பா தனுஷுற்கு ஜோடியாக சினேகாவும், மகன் தனுஷுற்கு ஜோடியாக மெஹரினும் நடித்திருந்தனர். 

தமிழில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மெஹரின். பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட்களையும் நடத்தி, ரசிகர்களை தன் பக்கம் வளைத்து வருகிறார். 

தற்போது தெலுங்கி அஸ்வத்தாமா என்ற படத்தில் நடித்து வரும் மெஹரின், அந்த பட தயாரிப்பாளரால் பாதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்ற மெஹரின் சக நடிகர்களுடன் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். 

அங்கு முதல் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மெஹரின், இரண்டாவது நாள் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மறுப்பு தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் எவ்வளவு கேட்டு பார்த்தும், தனக்கு ஸ்கீன் அலர்ஜி ஏற்பட்டு விட்டதாகவும், என்னால் வர முடியாது என்றும் பிடிவாதமாக மறுத்துள்ளார். 

இதனால் கடுப்பான தயாரிப்பாளர் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டால், ரூம் வாடகையை கட்டமாட்டேன் என மிரட்டியுள்ளார். தயாரிப்பாளரின் மிரட்டலால் பீதியான மெஹரின் மறுநாள் காலை யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் பெட்டி படுக்கையுடன் நட்சத்திர ஓட்டலை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதையடுத்து தயாரிப்பாளரை மடக்கிப்பிடித்த ஓட்டல் நிர்வாகம் வாடகை பணத்தை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.