ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, விசாகன் வணங்காமுடியின் திருமணம் நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.  இந்த வரவேற்பு நிகழ்சசியில் தலை மருமகன் தனுஷ் குரூப் போட்டோவில் இடம்பெறாதது ரஜினி குடும்பத்தையே வருத்தத்தில் ஆழ்த்தியதாம்.

மச்சினிச்சி வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சாதாரண உடையில் மிகவும் டல்லாக காணப்பட்ட தனுஷ், வரவேற்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட  பேமிலி குரூப் போட்டோ உட்பட மேடையில் எடுக்கப்பட்ட எந்தப் புகைப்படத்திலும் தனுஷ் தலை காட்டவே இல்லை, அசுரன்  படப்பிடிப்பில் இருந்ததால், லேட்டாக வந்ததாக சொல்லப்படுகிறது.  

மச்சினிச்சியின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு கூட நேரம்  ஒதுக்காமல் அப்படியென்ன பிசி என குடும்பத்தினரே கேட்க்கிறார்களாம்.  அதுமட்டுமல்ல,  அவர் மணமக்களுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை.