Asianet News TamilAsianet News Tamil

Maaran poster :லவ் மூடில் மாளவிகா மோகனன்... கட்டிப்பிடித்து ரொமாண்டிக் லுக் விடும் தனுஷ்- வைரலாகும் புகைப்படம்

தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி உள்ள மாறன் (Maaran) படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Dhanush malavika mohanan starrer maaran movie new poster
Author
Tamil Nadu, First Published Feb 14, 2022, 12:20 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் (Dhanush). இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் மாறன். துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் (Malavika Mohanan) நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.

மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Dhanush malavika mohanan starrer maaran movie new poster

தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக மாறன் (Maaran) படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், காதலர் தினமான இன்று மாறன் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறி உள்ளது. அந்த போஸ்டரில் தனுஷை மாளவிகா மோகனன் (Malavika Mohanan) கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் தனுஷ் மாறன் என்கிற கதாபாத்திரத்திலும், மாளவிகா மோகனன் தாரா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios