நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வந்த தொடரி, மற்றும் கொடி ஆகிய படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை அதனால் இந்த ட்விட்டை தனுஷ் போடவில்லை.

நேற்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடாலும் மோதிய போட்டியை தனுஷ் பார்த்துள்ளார்.

இதில் பெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என வெல்ல ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

ஆனால் தனுஷ் நாடலின் தீவிர ரசிகர் அதன் காரணமாக இந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை, இந்த தோல்வியை நினைத்து பார்க்கையில் இதயம் நொறுங்குகிறது என ட்விட் செய்துள்ளார்.