தனுஷ் நடிப்பில், தீபாவளிக்கு வெளிவர உள்ள கொடி படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் முதன்முறையாக இரண்டு வேடத்தில் நடித்திருப்பதால் ரசிகர்கள் டபுள் சந்தோஷத்தில் உள்ளனர். 

இந்நிலையில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை போன்ற மாவட்டங்களுக்கு கொடி திரைப்படத்தை விளம்பரபடுத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனால் தனுஷ், திரிஷா, பாடலாசிரியர் அருண்ராஜா, நடிகர் காளி வெங்கட் உள்ளிட்டோர் அந்த மாவட்டங்களுக்கு செல்ல இருக்கின்றனர்.

இந்த செய்தி ரசிகர்களை மேலும் உற்சாக படுத்தியுள்ளது.