Dhanush is going to give voice to Vishal in which film?
விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2 படத்தில் தனுஷ் ஒரு பாட்டு பாடுகிறாராம்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படம் சண்டக்கோழி.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் லிங்குசாமியே இயக்கி வருகிறார். இதில், விஷால், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில், விஷாலுக்காக தனுஷ் தன்னுடைய பாணியில் ஒரு பாட்டு பாட இருக்கிறார் என்றும் அது குத்துப்பாட்டு என்றும் தகவல் கசிந்துள்ளது.
இந்தப் படத்திற்கு முன்னதாக விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இரும்பு திரை வரும் பொங்கலன்று வெளியாகவுள்ளது என்பது கொசுறு தகவல்.
